திருச்சிராப்பள்ளி மாநகரில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள்

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் முன்னோர்கள் கூறிய பழமொழி. ஆனால் இன்று நாம் நம் பழைய பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், ஆரோக்கிய உணவுகளையும் மறந்து, வேதிப்பொருட்கள் கலந்த துரித உணவுகள் உண்பதையும், நவீன கண்டுபிடிப்பு சாதனங்களுடனும் நம் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். இதனால் இன்று நம் உடம்பில் பலவிதமான நோய்கள் தோன்றி வருகின்றன. மனிதனின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும், நோய்நொடிகளில் இருந்து மீண்டு வரவும் இன்றைய நவீன காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளின் தேவையும் அவசியமாகிறது. தற்போது பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இங்கு நாம் தமிழகத்தின் பெருநகரங்களில் ஒன்றாக விளங்கும் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் உள்ள சில மருத்துவமனைகளை பற்றி காணலாம்.

1. காவேரி மருத்துவமனை :

திருச்சி மாநகரில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளில் காவேரி மருத்துவமனை குறிப்பிடத்தக்கதாகும் (Top hospitals in Trichy). இது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்கி வழங்குகிறது. நோயாளிகளின் பராமரிப்பு, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் திருப்தி ஆகியவற்றில் முதன்மையான கவனம் செலுத்தி, சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்மாதிரியான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

மேலும் இங்கு இதயம், நரம்பியல், நெஞ்சக நோய், பொது மருத்துவம், எலும்பியல், சிறுநீரகவியல், மார்பக புற்று நோய் சிகிச்சை, அவசர சிகிச்சை, பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை, பிரசவம், பிளாஸ்டிக் சர்ஜரி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளும் சிறந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் வழங்கப்படுகிறது. காவேரி மருத்துவமனையில் (Kavery Hospital in Trichy) ஒவ்வொரு நோயாளிகளின் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்பட்டு அவர்கள் முக மலர்ச்சியுடன், தங்கள் வீட்டில் இருப்பதை போலவே உணரும் வகையில் சிறப்பான முறையில் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

காவேரி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை
நம்பர்: ராயல் ரோடு,
கண்டோன்மெண்ட்,
திருச்சிராப்பள்ளி- 620001.
தொடர்பு எண்: (0431)4077777, 3077777.
டோல் பிரீ :1800 425 0112.

2. வாசன் கண் மருத்துவமனை:

வாசன் கண் மருத்துவமனை (Eye Hospital in trichy)ஏழு தசாப்தங்களுக்கு முன்பு திருச்சியில் சிறு மருந்தகத்தில் தொடங்கப்பட்டு, இன்று கண் பராமரிப்பு சேவைகளை வழங்கும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து வந்துள்ளது. திருச்சி மாநகரில் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்கள் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் சிறந்த கண் பராமரிப்பு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 600 கண் மருத்துவர்கள் மற்றும் 6000+ மேற்பட்ட கவனிப்புக் குழுவினர் இந்த மருத்துவமனையில் பணிபுரிகின்றனர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோயாளிக்கும், பாகுபாடின்றி, முன்மாதிரியான கவனிப்பை வழங்கி வருகின்றனர்.

வாசன் கண் பராமரிப்பு மருத்துவமனை (Vasan Eye care in Trichy) இன்று உலகத் தரம் வாய்ந்த கண் பராமரிப்பு மற்றும் நிபுணத்துவத்திற்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு கண்புரை சேவைகள், ஒளிவிலகல் அறுவை சிகிச்சை சேவைகள், கார்னியா சேவைகள், குளுக்கோமா சேவைகள், விழித்திரை சேவைகள், குழந்தை கண் மருத்துவம், அக்குலோபிளாஸ்டி சேவைகள், யுவேடிஸ், நரம்பியல் – கண் மருத்துவம் பார்வை மறுவாழ்வு சேவைகள், கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் சேவைகள், தொடர்பு லென்ஸ்கள், ஆப்டிகல் சேவைகள் ஆகியவற்றை நிறைவான தரத்தில் மக்களுக்கு வழங்கி வருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

வாசன் கண் பராமரிப்பு மருத்துவமனை,
77/4 – B, விக்னேஷ் நகர்,
காட்டூர்,
திருச்சிராப்பள்ளி-620019.
தொடர்பு எண்: 0431 2533200, +91 9360946163.

3. வேலன் சிறப்பு மருத்துவமனை:

திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகளாவிய சுகாதார தரத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு அமைக்கப்பட்ட மருத்துவமனை தான் வேலன் சிறப்பு மருத்துவமனை (best hospital in trichy). இங்கு சுமார் 50 படுக்கைகள் வசதி கொண்டு நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இங்கு சிறந்த மருத்துவ குடும்பங்களை சார்ந்த தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் நோயளிகளின் பராமரிப்பில் கவனம் செலுத்தி அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் விதத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்டு வருகிறார்கள். நோயளிகளின் பராமரிப்பை கவனத்தில் கொண்டு இந்த வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (Velan speciality hospital in trichy) சிறந்த சர்வதேச தரத்துடன் கட்டப்பட்டுள்ளது.

இங்கு பொது மருத்துவம், அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இருதயவியல் சிகிச்சை, நீரழிவு நோய் சிகிச்சை, மகப்பேறியல், குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், அழகுசாதனவியல், தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை, கதிரியக்கவியல், சிறுநீரக நோய், சிறுநீரகம் டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் பல்வேறு சிகிச்சைகள் கைதேர்ந்த மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

வேலன் சிறப்பு மருத்துவமனை,
நம்பர்:1 ஜெயில் கார்னர்,
ஹைய்வெய்ஸ் காலனி,
சுந்தர்ராஜ் நகர்,
சங்கிலியாண்டபுரம்,
திருச்சிராப்பள்ளி-620020.
தொடர்பு எண்: 0431 – 2334444.

4. மாருதி மருத்துவமனை:

மாருதி மருத்துவமனை (Maruthi Hospital in Trichy) திருச்சியில் மிகச்சிறந்த மருத்துவ பராமரிப்பு மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு பல்வகை மருத்துவமனையாகும்(Best Hospital in Trichy). இந்த மருத்துவமனைக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. TN CM- திட்டத்தில் A1 தரத்துடன் கூடிய NABH அங்கீகாரம் பெற்ற முதன்மை சுகாதார மையம் ஆகும். இந்த மருத்துவமனை 140 படுக்கைகள், 90 மருத்துவ நிபுணர்கள் மற்றும் 20+ துறைகளுடன் இடைவிடாமல் இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை பிறந்த குழந்தை ஐ.சி.யு (என்.ஐ.சி.யு) சேவைகள் மற்றும் கைக்குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நடைமுறைகளுக்கு மிகவும் புகழ் பெற்றது ஆகும்.

மாருதி மருத்துவமனையில், நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களின் கூட்டு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி மிக விரிவான அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மருத்துவத் துறையிலும் நன்கு பயிற்சி பெற்ற துணை ஊழியர்கள் மற்றும் சமீபத்திய நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் நோய் கண்டறியும் உபகரணங்கள் உள்ளன. இங்கு எப்போதும் நோயளிகளின் ஆரோக்கியம், நம்பிக்கை மற்றும் கனிவான கவனிப்பு ஆகியவற்றை வழங்குவதில் கவனம் செலுத்தி சிறந்த நோயாளி பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்கி வருகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மாருதி மருத்துவமனை,
95 பட்டாபிராமன் சாலை,
தென்னூர்,
திருச்சிராப்பள்ளி-
தொடர்பு எண்: 0431-2240000, 2793141, 8489696111.

5. அட்லஸ் மருத்துவமனை:

திருச்சியில் உள்ள அட்லஸ் மருத்துவமனை என்பது இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவ சுற்றுலாவுக்கான (Best Hospital for Medical tourism in trichy)அங்கீகரிக்கப்பட்ட மையமாக திகழ்கிறது. அட்லஸ் மருத்துவமனைகள் திருச்சியில் உள்ள பிரபலமான சுகாதார மருத்துவமனைகளில் ஒன்றாகும். மேலும் இது ஆர்தோபிளாஸ்டி (மூட்டு மாற்று), அதிர்ச்சி, லேபராஸ்கோபி, ஆர்த்ரோஸ்கோபி, முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான சிறப்பான மையமாகவும், மொத்த இடுப்பு மாற்று, மொத்த முழங்கால் மாற்று, மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை, தோள்பட்டை மாற்று ஆர்த்ரோபிளாஸ்டியின் முன்னணி மையமாகவும் திகழ்கிறது.

இந்த மருத்துவமனை தொடர்ச்சியான பயிற்சி மற்றும் நோய் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அட்லஸ் மருத்துவமனைகளின் (Atlas Hospitals in Trichy)வெளிநோயாளர் பிரிவில் மருத்துவரின் அணுகுமுறை, பரிசோதனை, மருந்து எடுத்துக்கொள்வதற்கான ஆலோசனை, காத்திருக்கும் நேரம் மற்றும் மருத்துவ செலவு போன்ற மருத்துவ பராமரிப்பு ஆகியவை குறித்து நுகர்வோர் திருப்தியடையும் விதத்தில் சேவைகள் வழங்கப்படுகின்றன. அட்லஸ் மருத்துவமனை 100 படுக்கைகள், 5 வென்டிலேட்டர்கள் கொண்ட ஐ.சி.யு, 500 எம்.ஏ கம்ப்யூட்டரைஸ் எக்ஸ்-ரே, எண்டோஸ்கோபி & கொலோனோஸ்கோபி, மொபைல் எக்ஸ்-ரே கொண்ட அதிர்ச்சி ஐ.சி.யூ, அல்ட்ராமாடர்ன் லைகா ஜெர்மானின் மீள் அறுவை சிகிச்சை மற்றும் முதுகெலும்பு மைக்ரோ சர்ஜரிக்கு இயக்க நுண்ணோக்கி, ஹிக்காலிட்டி சீமென்ஸ் ஜெர்மன் டூயல் சிடி-ஸ்கேன், யுஎஸ்ஜி மற்றும் கலர் டாப்ளர் ஆகிய வசதிகளை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

அட்லஸ் மருத்துவமனை,
34/1- முதல் குறுக்கு தெரு, வி.என் நகர்,
(சத்திரம் பேருந்து நிலையம் அருகில்)
கரூர் சாலை, சிந்தாமணி,
திருச்சிராப்பள்ளி-620002.
தொடர்பு எண்: 0431-2701248.

6. டாக்டர் ஜி.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனை.

திருச்சி மாநகரில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கி வரும் மருத்துவமனைகளில் டாக்டர் ஜி.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனையும் (M.G.Viswanathan Hospitals in Trichy) ஒன்றாகும். இந்த மருத்துவமனை 2011 ஆம் ஆண்டில் புதிய கட்டிடத்தொகுதி மற்றும் தென்னகத்தில் முதல்முதலாக மருத்துவத்துறையில் பல தனித்துவமான அம்சங்களுடன் கூடிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் சிபிசிசி, பேக்கர்ஸ்ஃபீல்ட், கலிபோர்னியா ஆகியவற்றுடன் இணைந்து லினாக் எலக்ட்ரான்கள் ஆக்ஸிலரேட்டருடன் கூடிய புற்றுநோய் சிகிச்சைக்கான வசதி பிப்ரவரி 2, 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது (Best cancer treatment centre in Trichy).

இந்த மருத்துவமனையின் முக்கிய சிறப்பம்சங்கள்:

2010 ஆம் ஆண்டில் டாக்டர் ஜி.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனைகளுக்கு சிறந்த செயல்திறமைக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த மருத்துவமனை ஏழை மக்களுக்கான முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சிகிச்சை வழங்கும் நடுத்தர அளவிலான மருத்துவமனைகளில் முதலிடத்தைப் பிடித்தது.

1939 முதல் தொடங்கி டாக்டர் ஜி.விஸ்வநாதன் மற்றும் குடும்பத்தினர் இன்று வரை இலவச ஆலோசனை வழங்குகிறார்கள்.

தென்னிந்தியாவின் முதல் புற்றுநோய் மையம் 1989 இல் இந்த மருத்துவமனை சார்பாக ஆரம்பிக்கப்பட்டது.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து மாநிலத்தில் முதல் முறையாக டெலி மருத்துவ சேவைகளை வழங்கியது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

டாக்டர் ஜி.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனைகள்
30, பாபு சாலை,
திருச்சிராப்பள்ளி – 620008.
தொடர்பு எண்: 0431-4041234.

7. அஷ்யூர்டு பெஸ்ட் கேர் மருத்துவமனை (ABC ஹாஸ்பிடல்).

திருச்சி மாநகரில் மருத்துவ சேவைகளை வழங்கும் அஷ்யூர்டு பெஸ்ட் கேர் மருத்துவமனை (ABC Hospital in trichy) 100 படுக்கை வசதிகளை கொண்ட சிறப்பான மருத்துவமனையாகும். இது 2003 முதல் மக்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த மருத்துவமனை எமெர்ஜென்சி கேர், உள் மருத்துவம், மனநோய், சிறுநீரகம், நுரையீரல், நெப்ராலஜி (neuro hospital trichy) மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆகியவற்றுக்காக பரிந்துரை செய்யப்படும் மையமாகும். இங்கு நியாயமான செலவில், உயர் பாதுகாப்பு தரத்தில் நோயளிகளுக்கு நவீன சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்:

10-படுக்கைகள் கொண்ட பல ஒழுங்கு தீவிர சிகிச்சை பிரிவு

5 – படுக்கைகள் கொண்ட போஸ்ட் மயக்க மருந்து பராமரிப்பு பிரிவு

ஈசிஜி / டிரெட்மில் சோதனை

எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) / எலக்ட்ரோமியோகிராம் (EMG)

Co2 லேசர் வசதி

மைக்ரோ ஊசி ரேடியோ அதிர்வெண் அமைப்பு

தீவிர துடிப்பு ஒளி (ஐபிஎல்) அமைப்பு

எண்டோஸ்கோபி

லேபராஸ்கோபிக் / எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை

புதிதாகப் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பகுதி

லாபரோஸ்கோபிக் கருத்தடைக்கான வசதிகளுடன் கூடிய குடும்பக் கட்டுப்பாடு மையம் (அரசு அங்கீகாரம் பெற்றது)

அப்பர் GI ஸ்கோப்பி / ஈ.ஆர்.சி.பி / கொலொனோஸ்கோபி

24/7 டயாலிசிஸ் அலகு

கணக்கிடப்பட்ட டோமோகிராபி

கணினிமயமாக்கப்பட்ட ரேடியோகிராபி

அல்ட்ராசோனோகிராபி / எக்கோ கார்டியோகிராபி

டாப்ளர் ஆய்வுகள்

ஹோல்மியம் லேசர் அமைப்பு

ரேடியோ அலைவரிசை நீக்கம்

விரிவான சுகாதார பரிசோதனை திட்டங்கள்

முழுமையான வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்

உடற்பயிற்சி சிகிச்சை

அறுவைசிகிச்சை நுண்ணோக்கி

24/7 மருந்தகம் (24/7 Emergency Care Hospital in trichy)

அவசர அதிர்ச்சி பராமரிப்பு சேவை

NABH அங்கீகாரம் பெற்ற அல்ட்ரா மாடர்ன் ஆய்வகம்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

அஷ்யூர்டு பெஸ்ட் கேர் மருத்துவமனை (ABC ஹாஸ்பிடல்).
நம்பர்:1 மல்லிகை சாலை,
அண்ணா நகர் மெயின் ரோடு,
(கரூர் பைபாஸ் சாலை அருகில்)
திருச்சிராப்பள்ளி – 620018.
தொடர்பு எண்: 0431-4077111.

8. எம்.எஸ் மருத்துவமனை:

திருச்சி மாநகரின் மையத்தில், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது எம்.எஸ் மருத்துவமனை (M.S. Hospitals in trichy). 1988 இல் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை தலைசிறந்த மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பு குழுவால் நடத்தப்படுகிறது. இது ஏழை மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நியாயமான செலவில் உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.

இந்த மருத்துவமனை குடும்ப கட்டுப்பாடு மற்றும் லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்காக (Laparoscopic surgery centre in trichy) மத்திய அரசு மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுகாதார காப்பீட்டுத் திட்டத்துக்கும், பணமில்லா சிகிச்சை வசதிகளுக்காக வேறு சில காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் இங்கு பிரசவத்துக்கு முந்தைய மகப்பேறு பராமரிப்பின் கீழ் நீரிழிவு நோயுடன் கர்ப்பம், இரத்த அழுத்தத்துடன் கர்ப்பம், இதய நோய்களுடன் கர்ப்பம் மற்றும் பிற சிக்கலான கர்ப்பங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள கர்ப்பம் போன்ற நிலைமைகளுடன் கூடிய பிரசவ நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் தகுந்த நிபுணர்களின் குழுவால் சிகிச்சையளிக்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

செந்தில் நர்சிங் ஹோம்,
நம்பர்:91 பட்டர் ஒர்த் சாலை,
தெப்பக்குளம்,
திருச்சிராப்பள்ளி – 620002.
தொடர்பு எண்: 0431-2703220, 0431-2704405, 8870138743.

9. ஸ்டார் கிம்ஸ் இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டல் :

திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள ஸ்டார் கிம்ஸ் இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இரைப்பை குடல் அறுவைசிகிச்சைக்கு (Gastro Treatment centre in trichy) புகழ்பெற்றதாகும். இந்த மருத்துவமனையில் முதன்முதலாக ஜனவரி மாதம் 2015 ஆம் ஆண்டு முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் 30க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

இந்த மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை முதுகலைப் பட்டமும், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலிருந்து முதுநிலைப் பட்டயப் பட்டமும் பெற்றார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் -அறுவைசிகிச்சை இரைப்பை குடல் துறையில் ஆலோசகராகப் பயிற்சி பெற்றவர் என்பதால் மிகவும் சிறப்பான சிகிச்சைகளை நோயளிகளுக்கு வழங்கி வருகிறார். மேலும் அவர் 2009 ஆம் ஆண்டில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த அணியின் தீவிர உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததும், 2008 முதல் 2012 வரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்றுப் பிரிவின் குழு உறுப்பினராகவும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனையின் மருத்துவருக்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் தெற்கு மாநிலமான திருச்சியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்ததற்காக தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டார் கிம்ஸ் இன்டர்நேஷனல் ஹாஸ்பிடல்ஸ் (Star KIMS international Hospitals in Trichy) 100 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இங்கு கல்லீரல் நோய், சிறுநீரக நோய், இதயம், நுரையீரல் நோய் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நவீன உதவி இனப்பெருக்கத்துடன் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு வழங்கும் சிகிச்சை, ஸ்டெம்செல் சிகிச்சை மற்றும் கருப்பை குறைவான தாய்மார்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஸ்டார் கிம்ஸ் இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டல்
D-6, 6 வது குறுக்கு,
தில்லைநகர்,
(மேற்கு விரிவாக்க பகுதி),
திருச்சிராப்பள்ளி – 620102.
தொடர்பு எண்: 0431-2764571, 73737 63031.

10. ஆரோக்கியா மருத்துவமனை:

திருச்சி மாநகரின் மையத்தில் உள்ளது ஆரோக்கியா மருத்துவமனை (Arokya Hospital in Trichy). இது திருச்சியில் உள்ள சிறந்த பல்நோக்கு சிகிச்சை மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகள், 3 லேமினார் ஏர்ஃப்ளோ ஆபரேஷன் தியேட்டர்கள், 24 மணி நேரமும் இயங்கும் பரிசோதனை கூடம், தரமான மருந்துகளை கொண்ட உள் மருந்தகம் ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் இந்த மருத்துவமனை நகரத்திற்குள் கார் மற்றும் பஸ் மூலம் எளிதாக வந்தடையும்படி முக்கியமான இடத்தில் அமைந்துள்ளதும் கூடுதல் சிறப்பு.

இந்த மருத்துவமனை மேம்பட்ட கருவுறுதல் மையமாகவும் விளங்குகிறது (Fertility treatment centre in Trichy). கருவுறுதலில் மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதில் இந்த மருத்துவமனை மூன்றாம் நிலை பரிந்துரை மையமாக செயல்படுகிறது, இது பெண்களுக்கு அதிக ஆபத்துள்ள முன்னெச்சரிக்கை நிலைமைகளை கையாள 24 மணிநேர சேவைகளையும் வழங்குகிறது. மகளிர் மருத்துவம், மகப்பேறு, பிறந்த குழந்தை பராமரிப்பு, கருவுறாமை (IVF-ICSI), லாபரோஸ்கோபி, ஹிஸ்டெரோஸ்கோபி மற்றும் பிற அனைத்து சிகிச்சைகளையும் நியாயமான செலவில் வழங்கி வருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஆரோக்கியா மருத்துவமனை,
C-40, ராமலிங்கா நகர்,
3 வது பிரதான சாலை,
உறையூர்,
திருச்சிராப்பள்ளி – 620003.
தொடர்பு எண்: 0431-4021166, 9842121520.

Leave a Reply