திருச்சிராப்பள்ளி மாநகரில் சிறந்து விளங்கும் பொது மருத்துவ ஆலோசகர்கள்

நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள நாம் அனைவரும் ஒவ்வொரு மருத்துவரிடம் ஆலோசனைகள் பெறுவோம். இக்காலத்தில் மருத்துவ ஆலோசனைகள் என்பது நம் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக விளங்குகிறது. தற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மருத்துவமனையும், ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு வகையான விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நாம் திருச்சிராப்பள்ளி மாநகரில் சிறந்து விளங்கும் பத்து பொது மருத்துவ நிபுணர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. டாக்டர் ஜி.விக்னேஷ், MBBS, MD, DM.
உட்சுரப்பியல் நிபுணர் & பொது மருத்துவர்.

டாக்டர் ஜி.விக்னேஷ் திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் அரியமங்கலத்தில் உள்ள உட்சுரப்பியல் நிபுணர் மற்றும் பொது மருத்துவர் (Genaral Physicians in trichy) ஆவார். இவர் இந்தத் துறைகளில் 16 வருட அனுபவம் கொண்டவர். டாக்டர் ஜி.விக்னேஷ் திருச்சிராப்பள்ளி அரியமங்கலத்தில் உள்ள அப்பல்லோ சுகர் கிளினிக்கில் பயிற்சி மேற்கொள்கிறார். இவர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2005ல் MBBS முடித்தார், மேலும் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று 2005ல் MD – பொது மருத்துவம் முடித்தார். பின்னர் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்திலிருந்து 2014ல் உட்சுரப்பியல் படிப்பை முடித்தார். இவர் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) உறுப்பினர் ஆவார்.

இந்த மருத்துவரால் வழங்கப்படும் மருத்துவ சேவைகள்:

பைல்ஸ் சிகிச்சை (அறுவை சிகிச்சை அல்லாதது),
நீரிழிவு மேலாண்மை,
வைரஸ் காய்ச்சல் சிகிச்சை,
இன்சுலின் இலவச சிகிச்சை மற்றும்
இரைப்பை அழற்சி சிகிச்சை.

மருத்துவமனை முகவரி:

அப்பல்லோ சுகர் கிளினிக்,
அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,
சென்னை பைபாஸ் சாலை அருகில்,
அரியமங்கலம்,
திருச்சிராப்பள்ளி.

2. டாக்டர் ஆர். வாசுதேவன், MBBS.
பொது மருத்துவர்.

திரு. வாசுதேவன் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள ஸ்ரீரங்கத்தில் மருத்துவராக (General Physicians in trichy) உள்ளார். இவர் இந்தத் துறையில் 42 வருட அனுபவம் உள்ளவர் ஆவார். மருத்துவர் வாசுதேவன் அவர்கள் 1978 ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் MBBS முடித்தவர். இவர் ஸ்ரீரங்கத்தில் தனது மருத்துவமனையில் இருந்தபடி நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார். அனுபவம் உள்ள பொது மருத்துவர் என்பதால் இவருக்கு வாடியாளர்கள் அதிகம். இவர் காய்ச்சல், சளி. இருமல் மற்றும் பிற பொதுவான உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அனுபவம் மிக்கவராக திகழ்கிறார்.

மருத்துவமனை முகவரி:

வீ-கேர் மெடிக்கல் மற்றும் டயாக்னோஸ்டிக்ஸ்,
எண்- 26 அம்மாமண்டபம் சாலை,
ஸ்ரீரங்கம்,
திருச்சிராப்பள்ளி.

3. டாக்டர் ஏ.சந்தோஷ், MBBS.
பொது மருத்துவர்.

டாக்டர் ஏ.சந்தோஷ் திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள தேனூரில் மருத்துவராக (General Physicians in trichy) உள்ளார். இவர் இத்துறையில் 2 வருட அனுபவம் உள்ளவர் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியில் உள்ள காவேரி மருத்துவமனையில் பயிற்சி செய்கிறார். இவர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று 2019 ல் MBBS முடித்தார். இவர் காய்ச்சல், சளி, வயிற்று வலி மற்றும் பிற பொது மருத்துவம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

மருத்துவமனை முகவரி:

காவேரி மருத்துவமனை
No: 6 ராயல் சாலை,
கண்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி.

4. டாக்டர் இளமுருகன், MBBS, MD.
பொது மருத்துவர்.

டாக்டர். இளமுருகன் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் உள்ள மலைக்கோட்டையில் மருத்துவராக உள்ளார். இவர் இந்தத் துறையில் 42 வருட அனுபவம் உள்ளவர் ஆவார். டாக்டர். இளமுருகன் கிளினிக்கில் இருந்து மருத்துவ சேவைகளை வழங்கி வரும் இவர் 1979 ல் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS பட்டமும், 1985 ல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் இருந்து MD பட்டமும் பெற்றார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவைகளை வழங்கி வரும் இவர் காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி போன்ற பொது நோய்களுக்கு திறம்பட சிகிச்சை அளித்து வருகிறார்.

மருத்துவமனை முகவரி:

டாக்டர். இளமுருகன் கிளினிக்,
13 சின்னக்கடை தெரு,
திருச்சிராப்பள்ளி.

5. டாக்டர் எஸ். ஜோசப், MBBS, MD.
பொது மருத்துவம், உள் மருத்துவம், ஆலோசனை மருத்துவர், பொது மருத்துவர்.

டாக்டர். ஜோசப் தனது MBBS மற்றும் MD படிப்புகளை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் படித்து பட்டம் பெற்றார். இவர் பொது மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். MBBS-க்குப் பிறகு அவருக்கு 11 வருட அனுபவமும், MD-க்கு பிறகு 4 வருட அனுபவமும் பெற்றவர். இவர் பொதுவாம் மருத்துவம் சார்ந்த அனைத்து உடல்நல பிரச்சனைகளுக்கும் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

மருத்துவமனை முகவரி:

திருச்சி நியூரோ மற்றும் மல்டி ஸ்பெசலிட்டி சென்டர்,
40 D, 7 வது குறுக்கு சாலை,
(காவல் நிலையம் அருகில்)
தில்லைநகர் மேற்கு,
திருச்சிராப்பள்ளி.

6. டாக்டர். பி. மனோஜ் குமார் MBBS, MD
பொது மருத்துவர், மருத்துவ ஆலோசகர்.

டாக்டர் பி.மனோஜ் குமார் (Genaral Physicians in trichy) திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள பாப்பாக்குறிச்சி காட்டூரில் உள்ள பிரியா மருத்துவ மையத்தில் சேவை புரியும் மருத்துவ ஆலோசகர். இவர் நீரிழிவு மற்றும் உள் மருத்துவம் ஆகிய துறைகளில் 12 வருட அனுபவம் கொண்டவர். இவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் MD – பொது மருத்துவ படிப்பை 2013 ல் முடித்தார் மற்றும் 2009 இல் கேரளா பல்கலைக்கழகத்தில் MBBS – பொது மருத்துவ படிப்பை முடித்தார். இவர் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

இந்த மருத்துவரால் வழங்கப்படும் மருத்துவ சேவைகள்:
ஹெர்பெஸ் தொற்று சிகிச்சை,
மலச்சிக்கல்,
நீரிழிவு புண் சிகிச்சை,
வைரஸ் காய்ச்சல் சிகிச்சை.

மருத்துவமனை முகவரி:

பிரியா மருத்துவ மையம்.
1/415, தஞ்சை மெயின் ரோடு,
பாப்பாக்குறிச்சி, காட்டூர்,
திருச்சிராப்பள்ளி.

7. டாக்டர். சரண்யா பாலசுப்பிரமணியன், MD.
பொது மருத்துவர்.

டாக்டர் திரு. சரண்யா பாலசுப்பிரமணியன் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள மலைக்கோட்டையில் (Genaral Physicians in trichy) மருத்துவராக உள்ளார். இவர் மருத்துவத்துறையில் 5 வருட அனுபவம் கொண்டவர். இவர் கோலோர்ஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டில் பயிற்சி செய்கிறார். இவர் 2016 ல் அஜர்பான் குடியரசின் கஜார் பல்கலைக்கழகத்தில் MD – மருத்துவ படிப்பை முடித்தவர். இவர் பொது மருத்துவம் சார்ந்த பல்வேறு நோய்களுக்கும் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கிறார்.

மருத்துவமனை முகவரி:

கோலோர்ஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்,
B – 29, B – 30, இரண்டாம் தளம்,
சாஸ்திரி சாலை,
தில்லை நகர் ( ஸ்ரீ அம்பிகை சிட்டி சென்டர் அருகில்),
திருச்சிராப்பள்ளி.

8. டாக்டர் ஜே.ஹரிஷ், MBBS.
பொது மருத்துவர்.

டாக்டர் ஜே.ஹரிஷ், திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள புதூரில் (Genaral Physicians in trichy) மருத்துவ சேவையாற்றி வருகிறார். இவர் இந்தத் துறையில் 6 வருட அனுபவம் உள்ளவர். இவர் புதூரில் உள்ள சுந்தரம் மருத்துவமனையில் மருத்துவப்பணி செய்கிறார். இவர் 2014 ஆம் ஆண்டில் சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் MBBS முடித்தார். பொது மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் இவர் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

மருத்துவமனை முகவரி:

சுந்தரம் மருத்துவமனை.
17- ஈ.வி.ஆர் சாலை,
அருணா நகர்,
புதூர்,
திருச்சிராப்பள்ளி.

9. டாக்டர்.சேதுராமன், MBBS, MD.
பொது மருத்துவ ஆலோசகர்.

டாக்டர்.சேதுராமன் திருச்சிராப்பள்ளியில் உள்ள அரியமங்கலத்தில் மருத்துவராக (General Physicians in trichy) உள்ளார். இவர் இத்துறையில் 35 வருட அனுபவம் கொண்டவர். அரியமங்கலத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் சேதுராமன் பயிற்சி செய்கிறார். அவர் 1986 ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டமும், 2001 ல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் MD – பொது மருத்துவத்தில் பட்டமும், 2002 ல் ஆஸ்திரேலியாவின் துன்னடா பல்கலைக்கழகத்தில் நீரிழிவு சிகிச்சையில் பட்டப்படிப்பும் முடித்தவர். இவர் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினர். டாக்டர் சேதுராமன் அவர்கள் முதியோர் ஆரோக்கியம், உடல்நலப் பரிசோதனை (பொது), தடுப்பூசி/ நோய்த்தடுப்பு, பொது மருத்துவம் மற்றும் தொற்று நோய் சிகிச்சை போன்ற சேவைகளை வழங்கி வருகிறார்.

மருத்துவமனை முகவரி:

அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,
சென்னை பைபாஸ் சாலை அருகில்,
அரியமங்கலம்,
திருச்சிராப்பள்ளி.

10. டாக்டர். ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ், MBBS.
பொது மருத்துவர்

திரு. ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ் அவர்கள் திருச்சிராப்பள்ளி அரியமங்கலத்தில் மருத்துவராக (General Physicians in trichy) உள்ளார். இவர் இந்தத் துறையில் 20 வருட அனுபவம் உள்ளவர். திரு. ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ் அரியமங்கலத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பயிற்சி செய்கிறார். அவர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து 2001 ல் MBBS பட்டம் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினர்.

மருத்துவரால் வழங்கப்படும் சில மருத்துவ சேவைகள்:

ஆஸ்டியோபோரோசிஸ் சிகிச்சை,
விளையாட்டு காயம் மறுவாழ்வுக்கான பிசியோதெரபி,
வலி மேலாண்மை ஆலோசனை,
முதுகு மற்றும் கழுத்து வலி.

மருத்துவமனை முகவரி:

அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,
சென்னை பைபாஸ் சாலை அருகில்,
அரியமங்கலம்,
திருச்சிராப்பள்ளி.

Leave a Reply